தமிழர்களே.. தமிழர்களே.. ஏமாளி தமிழர்களே…

11 10 2008

சமீபத்தில் மலையாளத்தானுக, ஓணம் வாழ்த்துக்கள்( மலையாளிகள் படிக்க வேண்டாம்), போன்ற தமிழர்களின் புலம்பல் பதிவுகளையும், ஓரு வார இதழில் மலையாளர்களின் குணங்களை பற்றிய கட்டுரையையும் படிக்க நேர்ந்தது. அதன் பின்னர் என் எண்ணங்களை எழுதாமல் இருக்க முடியவில்லை. இந்த எண்ணத்தில் எவ்வளவுதூரம் உண்மை இருக்கிறது என தமிழர்கள் நடுநிலையோடு பதிலளியுங்கள்

மலையாளிகள் மட்டுமல் மற்ற எல்லா மொழியினரும் தமிழனை இழிவாகதான் பேசுவார்கள். ஏன் தமிழர்களாகிய நாம் கூட மற்ற மொழியினரை விட நாம் தான் சிறந்தவர்கள் என்று பேசுவதில்லையா? நாம் தான் சிறந்தவர்கள் என மறைமுகமாக நாம் பிறரை இகழ்கிறோம். அவர்கள் எங்களை தவிர எல்லோரும் இழிவானவர்கள் என நேரடியாக இகழ்ந்துகொள்கிறார்கள். அவ்வளவு தான் வேறுபாடு.

சரி நான் சொல்லவந்த உண்மை இது தான். இதை தமிழர்கள் வாதபிடிவாதத்திற்காக ஏற்க மறுத்தாலும் முழுமுதல் வரலாற்று உண்மை இது தான்.

தமிழர்கள் தங்களுக்குள் முதன்மையானவானக ஒரு தமிழனோ, நிறுவனமோ வர முயற்சித்தால் விடமாட்டார்கள். ஆயிரம் குறை சொல்வார்கள். அந்த சமயம் பார்த்து வேறுமொழி நபரோ அல்லது துக்கடா நிறுவனமோ நுழைந்தால் உடனே அதை உலகமாக அதிசயமாக போற்றி தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். அந்த வேற்றுமொழி நபர் அல்லது நிறுவனம் தான் சிறந்தது என விழாவைத்து கொண்டாடுவார்கள். இதை சரியாக பயன்படுத்தும் அந்த நபர் அல்லது நிறுவனம் குறுகிய காலத்திலேயே தமிழர்களின் தலைசிறந்த நபர் அல்லது நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு வந்துவிடும். அதன் பின்னர் தான் அந்த நிறுவனம் தமிழர்களுக்கு எதிராக தன் வேலையை காண்பிக்கும். அப்போது குதிப்பார்கள் தமிழர்கள் எங்களை அடக்குகிறார்கள், இழிவாக்குகிறார்கள். ஏமாற்றுகிறார்கள் என.

இதற்கு சமீபத்திய ஆதாரங்கள் பல இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் தமிழர்களின் தலைசிறந்த செய்திநிறுவனங்களுக்கு இடையில் ஒரு மளையாள, இந்தி செய்தி நிறுவனம் வந்ததும் அதை தான் தமிழ்ர்கள் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். நாளைக்கு தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல்கொடுப்பது வேற்று நிறுவனங்கள் அல்ல தமிழர் நிறுவனங்கள் தான் என தமிழர்களுக்கு புரிவதில்லை ஏன்? அடுத்து தமிழகத்தில் இல்லாத உணவுமுறைகளா, பேக்கரிகளா? ஆனால் அதே ஊரில் ஒரு கேரள பேக்கரி வரட்டும். நம்மவர்கள் அனைவரும் வரிந்து கட்டி அதை பிரபலமாக்குவார்கள். அதோடு நிற்பார்களா? காலாகாலமாக வைத்திருக்கும் தமிழர் கடைகளை எந்த அளவுக்கு இழிவுபடுத்தவேண்டுமோ அநத அளவுக்கு செய்வார்கள். காலங்கள் ஓட அதே கேரளா பேக்கரி சுடுதண்ணீரில் சக்கரை போட்டு கொடுத்தாலும் வாயை பொத்திக்கொண்டு குடித்துவிட்டு வருவார்கள் தமிழர்கள். இது உதாரணத்துக்காக இரண்டு எடுத்துக்காட்டுகள் இதுபோல வரலாற்றில் சமஸ்கிருத அதிக்கம், வேற்று இனத்தவரின் கையாடல் உட்பட தமிழர்களின் இழிவுக்கு ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் இருக்கிறது.

இங்கு தமிழர்களை இழிவாக சொல்லவில்லை. வந்தோரை வாழவைப்பது நமது பெருந்தன்மையாக இருக்கலாம். அதற்காக வருபவர்கள் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கும் நம்மில் ஒருவனை அழிக்கும்போது நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? இந்த கேவலமான புத்தி தமிழ்ர்கள் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

தமிழர்களே அவரவருக்கு அவரவர் குணாதிசயங்கள் நியாயதர்மமாக படும். எனவே நீங்களாகவே அடிமைகளாகிவிட்டு பின்னர் அவன் என்னை இப்படி இகழ்கிறான் இப்படி ஏமாற்றுகிறான் என நீங்கள் புலம்புவதை பார்த்து உலகே சிரிக்கிறது.

தமிழ்ர்களே உங்களை நீங்கள் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள். உங்களை நீங்களே அடிமைகளாகவும் ஏமாளிகளாகவும் சித்தரித்திருக்கும் காலம் மட்டும் வடமொழி ஆதிக்கம், மலையாளத்தவரின் இழிவுபடுத்தல், கன்னடர்களின் அடி, சிங்களர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இப்படி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


செயற்பாடுகள்

Information

6 responses

11 10 2008
11 10 2008
antony

whatever you mentioned here are all truthful.
Good Post, It is absolutely true that we will have to respect very much first.

11 10 2008
bmurali80

தமிழன் முட்டாள், ஏமாளி, அரை மடையன் என்று தலைப்பு வைத்தால் தான் செய்திகளைப் படிப்பார்கள் போல் உள்ளது. அதையே இந்த பதிவரும் செய்து சாதித்து விட்டார்.

நடக்கட்டும்.

ஆமா, எதோ உண்மைய விளம்பரதா சொன்னீங்க ஒன்னுத்தையும் காணுமே! ஒன்னுமில்லாததுக்கு பதில் எப்படி கொடுக்க முடியும் ?

ஓணம் என்று ஆரம்பித்து சம்மந்தமே இல்லாம ஒட்டகத்தில் சென்று முடிந்து விட்டது பதிவு. இப்ப படிக்கிறவன் ஏமாளியா இல்ல…

12 10 2008
அறிவகம்

திரு. bmurali80, நீங்கள் எதை எதிர்பார்த்து வந்தீர்கள்? எது இல்லாமல் போயிற்று.

தமிழனை ஏமாளி என்றுதான் இந்த பதிவு சொல்கிறது. ஆனால் கூடுதலாக உங்கள் பங்குக்கு 2 வார்த்தை சேர்த்துவிட்டீர்களே. அப்படி ஒரு செய்தியையா எதிர்பார்த்தீர்கள்?

தமிழன் ஏமாளி என்பது நான் மட்டும் சொல்லி தெரியவேண்டியதில்லை. உலகுக்கே தெரியும். ஏன் வரலாற்றுக்கே தெரியும்.

இதற்கு காரணம் தமிழன் கலாச்சாரத்தை விட பண்பாட்டை மதிப்பவன். தமிழன் பண்பாட்டுக்காக மற்றவர்களுக்கு பணிந்து நடக்கிறான். ஆனால் மற்றவர்கள் அந்த பணிவை பயன்படுத்தி தமிழனை அடிமையாக்குகிறார்கள்.

இதை இன்றுவரைக்கும் தமிழன் புரிந்துகொள்ள முடியாமல் ஏமாளியாக இருக்கிறான் என்பதன் ஆதங்கம் தான இந்த பதிவு.

12 10 2008
அறிவகம்

திரு. பழமைபேசி அருமையா எழுதியிருக்கீங்க..

தமிழர்கள் முதலில் தங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை விடவேண்டும். நம்மில் ஒருவன் முன்னேற முயற்சித்தால் அவனை தூக்கிவிடாவிட்டாலும் பரவாயில்லை, காலைவாரி விடக்கூடாது.

தமிழர்கள் தங்கள் பெருநதன்மையை பணிவாக காட்டுவது சிறந்த பண்பாடுதான். அதேநேரத்தில் பணிவை மற்றவர்கள் இழிவாக மதிப்பிடுவார்களானால், பணிவது பயந்து அல்ல பண்பாடுக்காக என்பதை தைரியமாக சொல்லும் தன்னம்பிக்கை தமிழனுக்கு என்று வருகிறதோ அன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும்.

தமிழர்களே பணிவு காட்டுங்கள் அதற்காக பணிந்துவிடாதீர்கள்.

12 10 2008
ஆட்காட்டி

சும்மா போங்கப்பா

பின்னூட்டமொன்றை இடுக