செய்தியாளர்களை குறைசொல்லும் வலைப்பதிவர்களே நீங்கள் யார்?

21 11 2008

சமீபத்தில் நடந்த சட்ட க்ல்லூரி சம்பவத்தை குறிப்பிட்டு பல வலைப்பதிவர்கள் செய்தியாளர்களை கடுமையாக விமர்சித்து குற்றம் சுமர்த்தி எழுதியுள்ளனர்.

செய்தியாளர்கள் என்றால் யார் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒரு செய்தியை பலபேரிடம் சேர்ப்பவர் தான் செய்தியாளர். அதனால் தானே மீடியா என ஆங்கிலத்திலும் ஊடகம் என தமிழிலும் சொல்கிறோம். சரி வலைபதிவர்கள் என்பவர் யார்? இவர்களும் ஒரு ஊடகம் தானே. செய்தி தாள், வானொலி, தொலைகாட்சி, இணையம் என, இணையத்தில் செயல்படும் செய்தியாளர்கள் தான் வலைப்பதிவர்கள். எனவே செய்தியாளர்கள் வேறு, வலைபதிவர்கள் வேறு என்று யாரும் செய்தியாளர்களை மட்டும் குறைபட்டுக்கொள்ள வேண்டாம்.

சரி விடயத்துக்கு போவோம்.

சட்டக்கல்லூரி சம்பவத்தில் போலீசாரோடு செய்தியாளர்களும் கலவரத்தை தடுக்க தவறிவிட்டனர் என்று திரு பழமைபேசி வலைபதிவரும், பணத்துக்காகவும் சாதிய ஆதிக்கத்திற்காவும் திரும்ப திரும்ப ஒளிபரப்பி தொடர்கலவரத்துக்கு வித்திடுகிறார்கள் என வினவு, மதிமாறன் உட்பட பதிவர்களும் குற்றம் சுமத்தி எழுதியுள்ளனர்.

ரளாவில் மதம் பிடித்த யானை ஒன்று பாகனை அரை மணி நேரத்துக்கும் மேலாக தூக்கி பந்தாடி கொன்ற கொடூர காட்சியை சென்ற ஆண்டு தொலைகாட்சிகளில் பலர் பார்த்திருக்க கூடும். இந்த காட்சியை ஓடி ஓடி உயிரையும் பணையம் வைத்து ஒளிப்பதிவு செய்தார்கள் செய்தியாளர்கள். இது திரும்ப திரும்ப தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த விடயத்தில் செய்தியாளர்கள் எப்படி குற்றம் சொல்ல முடியும்?

இனி சட்டகல்லூரி விடயத்துக்கு வருவோம். சட்டகல்லூரி சம்பவத்தை செய்தியாளர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் இன்று இந்த அளவுக்கு வலைபதிவில் விவாதித்திருப்பீர்களா? சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல் 3 மாணவர்கள் படுகாயம் என்று மட்டும் தான் உலகுக்கு தெரிந்து இருக்கும். இது வழக்கமான ஒன்று தானே என்று தான் உலக மக்கள் அனைவரும் அடுத்த வேலையை பார்த்திருப்பார்கள். ஆனால் செய்தி படம்பிடிக்கப்பட்டு காட்டப்பட்டதால் தான் மாணவர்கள் கலவரம் என்றால் எவ்வளவு கொடூரமாக இருக்கிறது என மக்கள் நேரடியாக புரிந்து கொண்டார்கள்.

 உண்மையில் வழக்கம் போல அடித்து கொள்வார்கள் என்று தான் காவலர்களும், கல்லூரி நிர்வாகமும் பொருப்பை தட்டி கழித்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் அதை தான் நிரூபித்தும் இருப்பார்கள். ஆனால் இன்று கல்லூரி மோதல்களுக்கு தீர்வு காணவேண்டியா கட்டாயத்துக்கு உலகம் வந்திருக்கிறது என்றால் அது செய்தியாளர்கலால் தானே.

ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. அங்கு செய்தியாளர்களை தவிர வேறு யாரும் இல்லை என்ற சூழலில் செய்தியாளர்கள் கேமராவை கீழே போட்டுவிட்டு அசம்பாவிதத்தை நிச்சயம் தடுப்பார்கள். ஆனால் சட்டகல்லூரி சம்பவ இடத்தில் கலவரத்தை தடுக்க காவல்துறையினர், பொதுமக்கள், கல்லூரி நிர்வாகம் என அத்தனை பேரும் இருக்கிறார்கள். அந்த இடத்தில் செய்தியாளர்கள் கேமராவை கீழே போட்டுவிட்டு கலவரத்தை தடுக்க வேண்டும் என கூறுவது எவ்விதத்தில் நியாயம்?

அடுத்து அந்த இடத்தில் காவல்துறையினர் இல்லை என்றால் நிச்சயமாக பொது மக்களே கலவரத்தை தட்டிக்கேட்டிருப்பார்கள். ஆனால் அத்தனை காவலர்கள் நின்று வேடிக்கை பார்க்கும் போது பொதுமக்கள் என்ன செய்யமுடியும்? காவல்களை ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள் என தட்டி கேட்க முடியும். அதை செய்தியாளர்களும் பொதுமக்களும் சரியா செய்தார்கள். தட்டி கேட்டார்கள். ஒரு பெண் நிருபர் காவல் ஆணையரின் நெஞ்சில் தட்டி கேள்வி கேட்டது உங்கள் கண்ணில் படவில்லையா?

கலவரமாகட்டும், பூகம்பமாட்டும், சுனாமியாகட்டும், மதம்பிடித்த யானையின் அட்டகாசமாகட்டும். செய்தியாளர்கள் உயிரை பணையம் வைத்து ஓடி ஓடி செய்தி சேகரிப்பார்கள். செய்தியை வெளிக்கொணர்வது தான் செய்தியாளரின் பணியே தவிர. செய்தி சேகரிக்காமல் இருப்பது அல்ல. ஒரு அசம்பாவிதத்தை தடுக்க ஆயிரம் பேர் முயலும் போது, அது எப்படி நடக்கிறது என படம்பிடித்து காட்ட உங்களுக்கு ஒரு செய்தியாளர் வேண்டாமா?

அடுத்து சட்டகல்லூரி கலவரம் திரும்ப திரும்ப காட்டப்படுவதால் தொடர் கலவரத்துக்கு தூண்டுகிறார்கள் என்ற குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

செய்திக்கும் செய்தி விமர்சனத்துக்கும் உள்ள வித்தியாசத்தை வலைபதிவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்தியை ஒளிபரப்புவதால் கலவரம் வரும் என்று சொல்வது தவறு. எந்த செய்தியானாலும் அது மக்களை சென்றடைய வேண்டும். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தானே செய்தி ஊடகங்கள்.

அடுத்து செய்தி விமர்சனம். இதை ஒவ்வொரு செய்திநிறுவனமும் ஒவ்வொரு கோணத்தில் சொல்லும். இதில் தான் தங்களுக்கான பாரபட்சத்தை காட்டுகின்றன. இது மக்களின் பார்வைக்கு கண்கூடாகவே தெரியும். ஜெயா, கலைஞர், சன், மக்கள் தொலைகாட்சிகளில் எப்படி செய்திகள் வரும் என மக்களுக்கு நன்றாகவே தெரியும். இது கலவரத்தை தூண்டும் என்பது தவறான வாதம். கலவரத்தை தூண்டுபவர்கள் என ஊருக்குள் சில தென்டச்சோறுகள் இருக்கிறது. அவர்கள் தான் இந்த செய்திவிமர்சனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள். அதனால் தான் கலவரங்களும் வருகின்றன.

சரி இனி வலைபதிவர்களுக்கான சுயபரிசோதனைக்கு வருவோம்.

நாம் செய்வது என்ன? செய்தியை எழுதுகிறோமா? செய்தி விமர்சனத்தை எழுதுகிறோமா? ஊடகங்களில் செய்தியை அறிகிறோம். அதை விமர்சிக்கிறோம். தவறில்லை. ஆனால் எப்படி விமர்சிக்கிறோம் என்பதை கவனித்துப்பாருங்கள். கலவரத்துக்கு வித்திடுபவர்கள் பட்டியலில் முதலில் வருபவர்கள் யார்? என்பது புரியவரும்.

 
செய்தி ஒளிபரப்பால் 3 மாணவர்களை 30 மாணவர்கள் மிருகத்தனமாக அடிக்கிறார்கள் என்ற பதட்டம் தான் மக்கள் மத்தியில் வந்திருக்குமே தவிர, அடிப்பவர்கள் இந்த சாதி, அடிவாங்குபவர் இந்த சாதி என்ற எண்ணம் மக்களுக்கு வந்திருக்காது. ஆனால் அடிப்பவர் இந்த சாதி, அடிபடுபவர் இந்த சாதி என குறிப்பிட்டு செய்திவிமர்சனம் செய்பவர்கள் தான் உண்மையில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பவர்கள். இதை செய்தது யார்? பிரபல செய்தி நிறுவனங்களா? சில வலைபதிவர்களா?

உலகில் உள்ள எல்லா பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களும் இரு பிரிவினர் என்று தான் செய்தியை விமர்சித்ததே தவிர, இரு சாதியினருக்கு இடையே என செய்தியை விமர்சிக்கவில்லையே. ஆனால் வலைபதிவில் செய்தியாளர்களை குற்றம் சொன்ன அனைத்து பதிவர்களும் உயர் சாதி தலித் சாதி என பிரித்தல்லவா விமர்சித்துள்ளீர்கள். இது தானே கலவரத்துக்கு வித்திடும்.

வலைபதிவு அன்பர்களே மதுரையில் இரு சாதியினருக்கு இடையே சுவர் பிரட்சனையில் கலவரம் நடக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆனால் சத்தியமாக அது எந்தெந்த சாதியினருக்கு இடையில் நடக்கிறது என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. அதே போல தான் சட்டக்கல்லூரி கலவரத்தில் அடித்ததும் அடிபட்டதும் எந்த சாதியினர் என்பதை வலைபதிவில் தான் பொருப்பில்லாமல் விமர்சிக்கிறீர்களே தவிர பிரபல செய்தி ஊடகங்கள் பொருப்பாகவே நடந்துள்ளன. தயவு செய்து சாதிய சிந்தனையை விட்டுவிட்டு மனிதாபிமான சிந்தனைக்கு வாருங்கள்.

சாதிய இடஓதுக்கீட்டை ஒழியுங்கள். சாதி சான்றிதழை ஒழியுங்கள். சாதி அமைப்புகளை ஒழியுங்கள். சாதியை ஓழியுங்கள். செய்தியை குறைபடுவதை விட செய்திவிமர்சனத்தில் விழிப்புடன் பொருப்புடன் இருங்கள்.

சாதி ஓதுக்கீடு ஒழிப்பு குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


செயல்கள்

தகவல்

10 பதில்கள்

21 11 2008
vijaygopalswami

///
சாதிய இடஓதுக்கீட்டை ஒழியுங்கள். சாதி சான்றிதழை ஒழியுங்கள். சாதி அமைப்புகளை ஒழியுங்கள். சாதியை ஓழியுங்கள். செய்தியை குறைபடுவதை விட செய்திவிமர்சனத்தில் விழிப்புடன் பொருப்புடன் இருங்கள்.
///

இந்த இடுகையில் ஏதாவது விஷயம் இருக்கும் என்று நினைத்து வந்தால், இந்த ஒரு பத்தியில் “டோட்டல் டேமேஜ்”

22 11 2008
ஆட்காட்டி

சரியான கேள்வி. நல்ல ஒரு ஊடகத்தை தப்பான வழியில் செலுத்துகிறார்கள். கேட்டால் நீ என்ன பெரிய அறிவாளியா என்று கேள்வி வேறு. அண்மையில் பதிவர் சந்திப்பு நடந்தது. என்ன வெட்டிக் கிழித்தார்கள். அதைப் பற்றி பஜ்ஜி திண்டம். சுஜ்ஜி திண்டம் எண்டு கதை வேறு. நல்லது.

இந்தியாவில் செய்தியாளர்கள் தமது பணியைச் செய்வது இல்லை. செய்தி நிறுவனங்களோ, புலனாய்வு அமைப்புக்களோ கொடுக்கும் அறிக்கைகளை வெளியிடுகின்றன. அவ்ர்களுக்கு சிந்தனை சட்ந்த்னியும் குறைவு. ஏற்கனவே அவர்களூம் குறைப் பட்டு அறிக்கையும் விட்டார்கள். அப்படி சுயமாக செய்தி வெளியிட முடியாவிட்டால் தமக்குரிய தார்மீகத்தில் இருந்து விலகுகிறார்கள். தப்பான கண்ணோட்டத்தில் செய்தி வெளியிடுவது சொந்த குடும்பப் பெண்களை தப்பான வழியில் செலுத்தி பணம் பார்ப்பது போன்றது.

22 11 2008
Veeran

//
சாதிய இடஓதுக்கீட்டை ஒழியுங்கள். சாதி சான்றிதழை ஒழியுங்கள். சாதி அமைப்புகளை ஒழியுங்கள். சாதியை ஓழியுங்கள். செய்தியை குறைபடுவதை விட செய்திவிமர்சனத்தில் விழிப்புடன் பொருப்புடன் இருங்கள்.
//

இதை நான் முழு மனதுடன் வழி மொழிகிறேன்.

22 11 2008
saravanan

நல்ல பதிவு. மதம் கொண்ட யானையுடன் அந்த மாணவர்கள் ஒப்பீடு அருமை. சாதிய ஒழிப்பு பற்றிய உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

22 11 2008
அசோக் கருப்பசாமி

//செய்தி ஒளிபரப்பால் 3 மாணவர்களை 30 மாணவர்கள் மிருகத்தனமாக அடிக்கிறார்கள் என்ற பதட்டம் தான் மக்கள் மத்தியில் வந்திருக்குமே தவிர, அடிப்பவர்கள் இந்த சாதி, அடிவாங்குபவர் இந்த சாதி என்ற எண்ணம் மக்களுக்கு வந்திருக்காது. ஆனால் அடிப்பவர் இந்த சாதி, அடிபடுபவர் இந்த சாதி என குறிப்பிட்டு செய்திவிமர்சனம் செய்பவர்கள் தான் உண்மையில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பவர்கள். இதை செய்தது யார்? பிரபல செய்தி நிறுவனங்களா? சில வலைபதிவர்களா? ///

இதை நான் முழு மனதுடன் வழி மொழிகிறேன்.

23 11 2008
பெயரிலி

why do they print letters like this pople like me(puddus)cant read.pls understand…………

24 11 2008
தமிழ்நாடன்

நீங்கள் சொல்வதும் சரிதான். செய்திகளை பாரபட்சமின்றி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான் செய்தியாளர்களின் பணி. செய்திகளின் பல்வேறு கோனங்களை சிந்தித்து தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டுயது மக்களின் பொறுப்புதான்.

24 11 2008
ajeevan

இது நான் வேதிமாறனது தலைப்புக்கு எழுதிய பதில் அவர் போட மாட்டார். நீங்களாவது விட்டால் வேறு கருத்துகள் தொடரும்….
முதல் நன்றி.

// அதுபோல்தான் ஊடகவியலாரும் பொதுமக்களும் ஒன்றுசேர்ந்து மாணவர்கள் தாக்கப்படும்போது தடுத்திருந்தால் அவர்களை நிச்சயம் பாராட்டியிருக்கலாம்.//

தென் இந்திய சினிமாக்களில் எத்தனையோ சண்டை காட்சிகள் வருகின்றன. அத்தனையையும் பார்த்துக்கொண்டு எந்த ரசிகனும் சுத்தி நிக்கிற யாருமே விலக்கு பிடிக்கல்லயே என்று யாராவது யோசித்ததுண்டா? இல்லை எந்த சினிமா விமர்சகராவது எழுதியதுண்டா? இல்லைதானே?

சினிமா அதிக பவர்புல் மீடியா. நல்ல சினிமா உலகத்துக்கு பாடம் புகட்டும். தவறான சினிமா தவறுகளை பிஞ்சிலிருந்தே குழந்தைகள் மனதில் பதிய வழி வகுக்கும்.

இதுபோலத்தான் சாக்கடை அரசியலும். வன்முறை தெரியாத வன்முறை. தன் சுயநலத்துக்கு அடுத்தவரை பலியெடுக்கும்.
சாதி – இனம் -மதம் இப்படி……………. ?

இந்த நிகழ்வுகள் தொலைக்காட்சியில் வந்ததால் சராசரி மக்களுக்கு கூட அன்று என்ன நடந்தது என தெரிந்தது. ஊடகங்கங்கள் என்ன சொன்னாலும் பார்க்கிறவனுக்கும் அறிவு வேணும்.

எழுதிறவர் எல்லோரும் சரரியாத்தான் எழுதுறார் என்று யாரும் நம்பக்கூடாது. உங்கள் கருத்தை எதிர்த்தால் அந்த கருத்தை வேதிமாறன் ஐயா , நீங்களே நீக்குகிறீர்கள்? எனது பல கருத்துகளை அப்படி செய்திருக்கிறீர்கள். இது கூட ஊடக தர்மமல்ல.

நான் வாழும் சுவிசில் யாரும் யாரையும் ஊடகங்களில் பொறுப்பாக திட்டலாம். சனநாயகம் தோன்றிய முதல் நாடு சுவிற்சர்லாந்து. மக்களின் ஆணைணயின்றி ஒரு மரத்தைக் கூட வெட்ட அரசுக்கு உரிமையில்லை.

அங்கே அரசும் கட்சிகளும் வன்முறைகளை தூண்டிவிட்டு அரசியல் வளர்க்கின்றன. சாதி இல்லை என சொல்லும் அனைவரும் சாதியை சொல்லி யாரையாவது திட்டியே அதை இல்லாதொழிக்க முற்படுகிறீர்கள். அதை உங்களைப் போன்றவர்கள் தவிர்த்தாலே சற்று குறையுமே?

உலகத்தை திருத்துவதற்கு முன் நாம் திருந்த வேண்டும்.
அது உலகத்தின் பெரும் பகுதியின் மாற்றம். அது மனித மனத்திலிருந்து உருவாகவேண்டும்.

நன்றி

http://www.ajeevan.ch

24 11 2008
kalagam

குழலி அவர்களுக்கு,

ஒரு பத்திரிக்கையாளன் கடமையாதெனில்,

அவை அவர்கள் பாடபுத்த்கத்தில்வரையறுக்கப்பட்டுள்ளது. நடுநிலைமை தவறாது இருத்தல் நன்று……………

மக்கள் இறால் பண்ணைகளை அழித்தால் அதை அம்மக்களின் (பாதிக்கப்பட்டவரின் நடவடிக்கையாக) பார்க்கமாட்டீர்கள்.அதை அத்துமீறலாகத்தான் பார்ப்பீர்கள்.
உங்களின் நடு நிலைமையின் தரம் அப்படி. எல்லா இடத்திலும் நியாயத்தராசு தேடி அலைந்து கொண்டிருகின்றீர்கள்?.உண்மையை சொல்லுங்கள்.வினவு எழுதிதான் மக்களுக்கு அடிவாங்கியவன் சாதி தெரியுமா? .அடிவாங்கிய மறுநாளே தமிழகம் முழுவதும் தேவர் சாதி சங்கங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினவே அதைகூட வினவு போன்றோர்.வெளியிட்டனரா? இல்லை மாட்சிமை தாங்கிய பத்திரிக்கையா?. திண்ணியத்தில் மலம் தின்னவைக்கப்பட்டதாக என்று கூறப்பட்ட நபர் என்று எழுதிய பத்திரிக்கை நிருபரின் நியாயத்தராசு எப்படி சரி சமமாய் நிற்கின்றது.முத்து ராமலிங்கம் என்ற சாதிவெறியனை பற்றி நீங்கள் என்ன குறிப்பிட்டீர்கள்?
அவரின் சாதிவெறியை எங்காவது மறைமுகமாவவது வெளி காட்டினீர்களா?
60 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் இந்த சனநாயகத்துக்கு -நீங்கள் மூட்டு கொடுத்து வருகின்றீர்கள் என்பதை மறுக்கமுடியுமா?மேலவளவு,கொடியன்குளம் கலவரத்தை இப்படித்தான் பக்கம் பக்கமாக எழுதினீர்களா?
சன் டீவி செய்தது என்ன தெரியுமா? தமிழகம் முழுவதும் தலித்துக்கெதிராக அவர்கள் சாதிவெறியர்கள் என்ற பொய் தோற்றத்தை தான்
உண்மயை புரிந்து கொள்ளுங்கள்.

நாம் மக்களிடமிருந்து கற்போம்
மக்களுக்காக வாழ்வோம்

கலகம்.

http://kalagam.wordpress.com

25 11 2008
நித்தில்

வினவு மற்றும் மதிமாறன் இடுகைகளில் செய்தியாளர்களை குற்றம்கூறவில்லை. மாறாக ஊடகங்கள் மாணவர்கள் தாக்கியதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி மக்கள்மத்தியில் ஒருதலைபட்சமான கருத்தை திணிப்பதைதான் சாடுகின்றனர்.

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்துக்கொள்ளும் அதே வேலையில் கைதான மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் வேதனையாகவும் அல்லவா இருக்கின்றது.

மற்றபடி சாதிய இடஓதுக்கீட்டை ஒழியுங்கள். சாதி சான்றிதழை ஒழியுங்கள். சாதி அமைப்புகளை ஒழியுங்கள். சாதியை ஓழியுங்கள் என்ற உங்களது ஆலோசனை ஏற்புடையது அல்ல. அப்படியே இருந்தாலும் அதை மேல்சாதி என்று கூறிக்கொள்பவர்களிடம்தான் தொடங்கவேண்டும்.

நட்புடன் நித்தில்

மறுமொழியவும்